Skip to main content

திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
 

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். கிட்டதட்ட கடந்த முறை தேர்தல் நின்றது உங்களால்தான். பணப்பட்டுவாடா செய்து, முறைகேடு நடந்ததினால் வேலூர் மக்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்கள். 

 

  a c shanmugam



மீண்டும் இப்போது ரூபாய் 23 லட்சம் ஒரு இடத்தில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே நீங்கள் பணத்தை பதுக்கி வைத்து, பணத்தை வைத்துதான் ஓட்டு வாங்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. பணத்தை பார்த்து மக்கள் மயங்க மாட்டார்கள். உண்மையான சேவையை, தொண்டை நிச்சமாக மக்கள் ஏற்பார்கள். 
 

 

மீண்டும் திமுக பணப் பிரச்சனையை கொண்டு வந்து வேலூர் தேர்தலை நிறுத்த வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் சாதனையை சொல்லி வாக்கு சேகரியுங்கள். வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்திவிடாதீர்கள் என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.