Skip to main content

“ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தின் ஒரு பகுதி” - வானதி சீனிவாசன்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Vanathi Srinivasan says Jallikattu is a part of Sanatana Dharma

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பா.ஜ.க சார்பில் தூய்மை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் கோனியம்மன் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அலங்காநல்லூர் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் கோவிலோடு தொடர்புடையது. இதனை எம்.பி. சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா?. கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு தான் காளையை அவிழ்த்து விடுவார்கள். அது தான் இந்த நாட்டின் மரபு, பண்பாடு எல்லாமே. அதாவது, திமுகவும், கம்யூனிஸ்டும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் உடைய அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தை சீரழித்து அதை அவமானப்படுத்துவது தான் வேலையாக வைத்திருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டில் முதல் காளை சாமியோட காளை தான் முதலில் வெளியே வரும். அப்படியென்றால், கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க நினைக்கிறார்களா?. ஜல்லிக்கட்டு என்பது இந்து கலாச்சாரத்தில் ஒரு கூறு. அதனால் தான் காளையை சாமியோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பொங்கல் என்பதே சூரிய கடவுளைப் பார்த்து கும்பிடுவது தான். வேறு மதத்தில் கற்பூரம், ஆரத்தி எதுவும் காட்டுகிறார்களா?. இந்து மதத்தில் தான் கற்பூரம் காட்டி திருநீறு பூசுகிறோம். இது முட்டாள்தனமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி. சனாதன தர்மம் மட்டும் தான் மனிதனை மட்டும் இங்கு இருக்கக்கூடிய மிருகத்தையும் சமமாக பார்க்க சொல்லிதரக்கூடிய ஒரு தர்மம்” என்று கூறினார்.

அப்போது அவரிடம், ‘அங்கே கோவில் வருவது எங்கள் பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த மசூதி கட்டப்பட்டதே கோவிலை இடித்து தான் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனால், இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் நியாமாக இருக்கும். தமிழக முதல்வர் நேரில் கூட அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதியளித்துள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மட்டுமல்ல அந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் நாங்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம். எப்படி, கிறிஸ்துவ கோவிலுக்கும், இஸ்லாமிய கோவிலுக்கும் சென்று அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்களோ, அது போல் இந்த கோவிலுக்கும் வந்து ராம பக்தர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும். 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்ததின் உடைய அடுத்தக் கட்டம். இந்த நாட்டில் வருடம் முழுவதும் தேர்தல் நடத்துகின்ற பொழுது, அந்த மாநிலங்களில் எந்தவிதமான வளர்ச்சி பணியையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளுகின்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரம் எல்லாம் இதற்கு மட்டுமே செலவாகிறது. அதனால், சீர்திருத்தை நோக்கி உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள். அதை விட்டு புறக்கணிப்பதோ அல்லது மறுப்பதோ சரியாக வராது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

துணை முதல்வர் பதவி? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம் 

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Udayanidhi Stalin answered about Deputy Chief Minister position

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “துணை முதல்வர் பதவி உயர்வு குறித்துப் பல செய்திகள் வருகின்றன. எங்கள் அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்பார்கள் என்று நான் முன்பே பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறேன். திமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வரின் துணையாகத் தான் பணியாற்றி வருகின்றனர்.

எந்தப் பதவியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இளைஞர் அணிச் செயலாளர் பதவிதான் எனக்குப் பிடித்தது. கடந்த தேர்தல்களைப் போல் 2026 தேர்தல்தான் நமது இலக்கு. எந்தக் கூட்டணி வந்தாலும் நமது தலைவர் தான் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது திமுக கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது.  தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

Next Story

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?; அமைச்சர் துரைமுருகன் பதில்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Durai Murugan Answer by  Udayanidhi Stalin's Deputy Chief Minister?

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “நான் துணை முதலமைச்சர் ஆகப்போவதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள். அனைத்து அமைச்சர்களும், முதல்வருக்கு துணையாக இருப்போம். அது போல், திமுக அமைப்பாளர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” எனப் பேசினார். 

இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், துணை முதல்வர் பதவி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். நான் கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டவன். 60 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டவன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம். ” என்று கூறினார்.