Skip to main content

ஜி.எஸ்.டி.யால், பெட்டிக்கடை மளிகைக் கடை வியாபாரிகள் நசுக்கப்பட்டனர்... - வைகோ பரப்புரை.

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

தாமிரபரணிக்கரையின் ஸ்ரீவைகுண்டம் நகரிலிருந்து தூத்துக்குடி எம்.பி. வேட்பாளரான தி.மு.க.வின் கனிமொழிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் வைகோ. தூத்துக்குடி குறுக்குச்சாலை, நாகலாபுரம் வரை சென்றது அவரது பிரச்சாரம். அவரது பரப்புரையின் போது கனிமொழியும் இருந்தார்.

 

vaiko and kanimozhi

 

பரப்புரையின் போது பேசிய வைகோ, தி.மு.க.வின் கனிமொழிக்காக வாக்கு சேகரிப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அவர் பெண் உரிமைக்காக, விவசாயிகள், நலிந்தோர். மீனவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவர். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும். மோடி அரசானது தமிழகத்தை, அனைத்து துறைகளையும் வஞ்சித்து விட்டது.

 

இலங்கை அரசால் மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட போதும், கஜா புயலால் தமிழக மக்கள் உயிரிழந்த போதும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், மோடி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி.யால் பெட்டிக்கடை மளிகைக் கடைகள் வியாபாரிகள் நசுக்கப்பட்டுள்ளனர் என்று பேசினார். பரப்புரையின் போது அனைத்துக் கட்சித் தொண்டர்கள் உட்பட திரளான கூட்டம் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'எந்தக் காலத்திலும் திமுக கொள்கையை விட்டுக் கொடுக்காது' - கனிமொழி பேட்டி  

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'DMK will never give up its policy' - Kanimozhi interview

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், ''கலைஞரின் மனசாட்சியாக திமுக போற்றிய மாறன் இருந்த பொறுப்பிற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தன்னுடைய கொள்கைகளை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. பத்தாண்டு காலமாக பாஜகவுடைய எத்தனையோ மசோதாக்களை நாங்கள் எதிர்த்திருக்கிறோம். தொடர்ந்து சிறுபான்மை மக்களை; இந்த நாட்டை; அரசியல் சாசனத்தை; சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். இதுதான் முதல்வர் எங்களுக்கு சொல்லி இருக்கக் கூடிய அடிப்படை'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? ஆட்சி அமைக்க முடியவில்லை வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக என்ன நடவடிக்கைகளை எடுக்கும்' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கனிமொழி, 'இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிச்சயமாக வலியுறுத்துவோம். நீட் தேர்வு விலக்குக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அதுவும் இன்று கண்கூடாக எத்தனைக் குழப்பங்கள், எத்தனை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாடு முழுவதும் பார்க்கக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து நீட்டுக்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகம் செயல்படும். அதேபோல் கல்வி கடன் ரத்து என்பதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்'' என்றார்.

Next Story

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு - திமுக திடீர் ஆலோசனை!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 'By-election to Vikravandi'- DMK advises

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் தற்போது இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், 'ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் எனவும், ஜூன் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் துரைமுருகன் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.