முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின், துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ராசாத்தி அம்மாள் மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.