Skip to main content

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் பறந்த அதிமுகவினரின் வாகனங்கள்!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

ddd

 

சாமானிய மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குப் போகும்போது வழியில் சுங்கக் கட்டணம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட சாதாரண வாகனமாக இருந்தால், குறைந்தது 300 ரூபாய் வரையும் பெரிய வாகனமாக இருந்தால் 400 ரூபாய் வரையும் செலவு செய்யும் நிலை உள்ளது. 

 

இந்தநிலையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்குச் சென்ற அனைத்து வாகனங்களும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்தந்த வாகனத்தின் எண்ணை கொடுத்துவிட்டால், அவர்கள் டோல் பிளாசாவுக்கு நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். அனைத்து வாகனங்களும் எந்த ஊரில் இருந்து சென்னை வரை போனாலும் (அதாவது அதிமுக தொண்டர்கள் போகும் பஸ்சுக்கும் நிர்வாகிகள் போகும் வாகனங்களுக்கும்) டோல் பிளாசாக்களில் நேற்றும் இன்றும் டோல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்