தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி- சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போட்டியிடும் தொகுதிகள் இறுதியானது. இதையடுத்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டார்.
அதன்படி, துறைமுகம், உத்தரமேரூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, போளூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், ஆத்தூர் (தனி), சங்ககிரி, திருச்செங்கோடு, அந்தியூர், கிருஷ்ணராயபுரம் (தனி), இலால்குடி, கடலூர், சிதம்பரம், சீர்காழி (தனி), திருத்துறைப்பூண்டி (தனி), சிவகங்கை, மதுரை (தெற்கு), பெரியகுளம் (தனி), இராஜபாளையம், விருதுநகர், விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, இராதாபுரம், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.