தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரையில் இன்று (20/03/2021) தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது; "தப்பி தவறிக் கூட ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக் கூடாது. பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். இருவரும் தமிழக மக்களை ஏமாற்றி வருவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உதாரணம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாவிலும், எந்தச் சூழலிலும் மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்.
குஜராத் மாநிலத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை தமிழகத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தில்லு, முல்லு தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் பொல்லாத ஆட்சி நடக்கிறது என்பதற்குப் பொள்ளாச்சி உதாரணம்" என்றார்.