![TN ASSEMBLY ELECTION AMMK CANDIDATE CHANGED TTV ANNOUNCED](http://image.nakkheeran.in/cdn/farfuture/b4mp1Q8uwVCjaKttvwMPcooJdXZgbY-N4D5KfDsyPbU/1615823691/sites/default/files/inline-images/TTV%2045222%20OKK.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் இன்று (15/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்து, அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (15/03/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அ.ம.மு.க.வின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06/04/2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக இரா.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
![TN ASSEMBLY ELECTION AMMK CANDIDATE CHANGED TTV ANNOUNCED](http://image.nakkheeran.in/cdn/farfuture/3XBSjE8iDkjq4k8OFDLpVL4QKrtIt8V_wiz4F0sekRA/1615823700/sites/default/files/inline-images/TTV%20DHI12.jpg)
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அ.ம.மு.க. வேட்பாளராக சீமா அறிவிக்கப்படுகிறார்'. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.