திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் பெத்தானியாபுரம் அருகே நெடுஞ்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி உலகநம்பி ஏற்பாட்டில் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
இக்கொடி கம்பத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்குத் திரண்டிருந்த மக்களிடையே அடங்கமறு, அத்துமீறு என்ற முழக்கங்களை எழுப்பிய திருமாவளவன், சமாதான புறாக்களைப் பறக்கவிட்டார். பின்னர் தொண்டர்கள், பொதுமக்கள் எழுச்சி ஆரவாரம் செய்தனர். அதன்பின் திருமாவளவன், ஏராளமான தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதன் பின் கட்சி பொறுப்பாளர்களுடன் திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டார்.