Skip to main content

'என்ன வாய்ப்பு கிடைக்கும் பதற்றத்தை உருவாக்கலாம் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்'-பாஜக மீது திருமா சாடல்!

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

'They are waiting for any opportunity to create tension' - Thiruma

தருமபுரம் ஆதீன குரு மகா சந்நிதானத்தின் ஞானரத யாத்திரையைத் துவக்கி வைக்க மயிலாடுதுறைக்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு விசிக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்டினர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனங்களின் குறுக்கே கருப்புக்கொடியை எரிந்தும் தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

'They are waiting for any opportunity to create tension' - Thiruma

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், "ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளைத்தான் வீசி எறிந்தார்கள் என்பதை காவல்துறை கூடுதல் இயக்குநர் மிக விளக்கமாக தெரிவித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பேசினார்.

'They are waiting for any opportunity to create tension' - Thiruma

இந்நிலையில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த பாஜக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ''பாஜக கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு பதற்றத்தை உருவாக்கப்பார்கிறார்கள். என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திமுகவின் சமூக நீதி அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன்மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இங்கே ஒரு முக்கிய சக்தியாக மாறிவிட வேண்டும் என அவர்கள் கணக்குப்போட்டுச் செய்கிறார்கள். எனவே ஆளுநர் மீது கல்லெறிந்ததாகவோ, கொடி எரிந்ததாகவோ கூறுவது அபத்தமான அவதூறு'' என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த புதுச்சேரி பாஜக

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Puducherry BJP shocks AIADMK

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதேநேரம் புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான தீவிரப் பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன, இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''இந்த தேர்தலில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நம்முடைய புதுச்சேரியினுடைய பாராளுமன்ற இடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று. வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி புதுச்சேரி வருவார்'' எனவும் தெரிவித்தார்.

Puducherry BJP shocks AIADMK

அண்மையில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசி இருந்தார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இது மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணிக்கான அடித்தளம் என்றும் பேசப்படட்டது. புதுச்சேரியில் பாஜகவிற்கு வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்படுத்தி 6 சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது.

தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இதனால் பாஜகவிற்கு வாக்குகள் குறைந்துவிடும் என்ற நிலையில் அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் புகைப்படங்களை வைத்து புதுச்சேரியில் பாஜக வாக்குகளை கேட்டு வருகிறது. அக்கட்சியின் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையில் பாஜக ஈடுபட்டிருப்பது அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

சீட்டு யாருக்கு?- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Who is the seat for?- Puducherry Chief Minister Rangasamy interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதேநேரம் புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தலுக்கான தீவிரப் பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன, இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''இந்த தேர்தலில் நாங்கள் சொல்லி இருக்கிறோம். நம்முடைய புதுச்சேரியினுடைய பாராளுமன்ற இடம் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று. வேட்பாளர்களை அவர்கள் அறிவிப்பார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி புதுச்சேரி வருவார்'' எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மாநிலங்களவை இடத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூட்டணிக்கு விட்டுக் கொடுத்திருந்த, நிலையில் மக்களவை இடத்தையும் கூட்டணிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.