இந்தியாவில் ஏழு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்கும், மாநிலத்தில் திமுக அணிக்கும் பெருமாம்பான்மை கிடைக்கும் என்று அறிவித்தனர். இருந்தாலும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் இந்த முறை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநில கட்சிகளின் செல்வாக்கு இந்த தேர்தலில் அதிகமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மாநில கட்சிகளே இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் என்று கூறுகின்றனர்.அந்த வகையில் தமிழகத்தில் திமுக கட்சியும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும்,மேற்கு வங்காளத்தில் மம்தாவின் கட்சியின், உத்திரபிரதேசத்தில் மாயவாதி கட்சியும் இந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் பெரும் சக்தியாக உள்ளனர்.இந்த நிலையில் பாஜக அல்லாத எதிர் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
மேலும் வரும் 23ஆம் தேதி டெல்லியில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் மிக ஆர்வம் காட்டுபவர் சந்திரபாபு நாயுடு தான்.ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம் வரும் சூழல் வந்தால் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.