Skip to main content

தங்க தமிழ்செல்வன் விலகல்... வாட்ஸ் அப்பில் பரவும் புகைப்படம் 

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை மதுரையில் துவங்கினார் டி.டி.வி.தினகரன். அப்போது இந்தக் கட்சியை துவங்குவதற்கும், மதுரையில் அந்த கட்சி விழா சிறப்பாக நடப்பதற்கும் கடுமையாக உழைத்தவர்கள் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன். 


 

 

thanga tamil selvan ttv dinakaran - ammk



சாமி உடல்நலக் குறைவால் காலமானார். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததுடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த தங்க தமிழ்செல்வன் தற்போது தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து வெளியேறிவிட்டார். 


 

 

இந்த நிலையில் மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கியபோது மேடையில் டி.டி.வி. தினகரனுடன் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்த போட்டோ வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது.  

 

-மகி

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?” - இ.பி.எஸ். விளக்கம்!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
"Why the By-Election Boycott?" - EPS Explanation

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

"Why the By-Election Boycott?" - EPS Explanation

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக போட்டியிடாதது குறித்து பேசுகையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. அந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் செய்து திமுகவினர் முறைகேடு புரிந்தனர்.

திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதால் விக்கரவாண்டி இடைத்த் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. சுதந்திரமாக இடைத் தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு. அவரின் கனவு பலிக்காது. தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி மாறி மாறி கிடைக்கும்” எனத் தெரிவித்தார். 

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Bakrit festival; Greetings leaders

பக்ரீத் பண்டிகை நாளை (17.06.2024) கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், “பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இசுலாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம் நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இது போன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி, நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி. அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், அன்பு ஆகியவற்றைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். 

Bakrit festival; Greetings leaders

இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளை பறிக்கிற வகையில் 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி செயல்பட்டு வந்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக காங்கிரஸ் பேரியக்கமும், தலைவர் ராகுல்காந்தி அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும்  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். 

Bakrit festival; Greetings leaders

இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.