Skip to main content

டாஸ்மாக் கடையைத் திறக்காதே... கே.பாலகிருஷ்ணன் முழக்கம்... (படங்கள்)

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

கரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கை, மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமலும், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டிக்கும் வகையிலும், மாநில அரசு கோரிய நிதயை மத்திய அரசு வழங்காததைக் கண்டித்தும் மே 7ஆம் தேதி கருப்புச் சின்னம் அணிவது என்றும் அன்று காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேருக்கு அதிகமாகாமல் பதினைந்து நிமிடங்கள் நின்று, கரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம் என முழக்கமிட்டுக் கலைவதென்றும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து பேசி முடிவு மேற்கொள்ளப்பட்டது. 
 

அதன்படி இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார். 

 

சார்ந்த செய்திகள்