Published on 04/03/2021 | Edited on 04/03/2021
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிக்கு இடையே இழுபறி நீடிக்கிறது. இருப்பினும் நாளை (05/03/2021) சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, "எங்களுக்கு மூன்றாவது அணி மீது நம்பிக்கையில்லை. கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வரவில்லை. தேர்தல் விதிகள் எதையும் ராகுல் மீறவில்லை; பா.ஜ.க. அப்படித்தான் செயல்படும்" என்றார்.