Skip to main content

தமிழ்நாடு தான் காரணம்; நாடாளுமன்றத்தில் குறை சொன்ன அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Tamil Nadu is the reason; CM Stalin's letter to Minister Nitin Gadkari who complained in Parliament

 

சென்னையில் சாலை அமைப்பது குறித்து தயாநிதி மாறன் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறிய பதிலின் காரணமாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

 

சென்னையில் இருந்து இராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த சாலை தொடர்பாக ஏற்கெனவே நான் பல முறை எம்.பி.யிடம் விளக்கம் அளித்துள்ளேன். அத்துடன் அவரது மாநில முதல்வருக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். சாலைப்பணிகளை இந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை முடித்தால் சென்னை முதல் பெங்களூரு செல்ல வெறும் 2 மணி நேரம் மட்டுமே செலவாகும். 

 

தமிழ்நாட்டில் அமையும் நெடுஞ்சாலையின் முக்கியத்துவமும் நான் அறிவேன். இதை விரைந்து முடிக்க நாங்கள் நூறு சதவிகிதம் தயாராக உள்ளோம். இதற்காக உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளில் அமையும் விரைவு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனக் கூறினார்.

 

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலஜாபேட்டை வரையிலான சாலை, சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது.

 

இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதன் காரணமாக சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு உதான் இரயிலில் செல்ல நேரிட்டது. இந்த சாலை தொடர்பான எங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்குச் சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு இத்தகைய நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மாநில அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல என்றும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

 

நாடாளுமன்றத்தில் எம்.பி தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை-4-ல் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்சனையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோசமான சாலை பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணம் 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாலைகளின் மோசமான நிலைமை, பயனர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.