வெளிச்சம் நிருபரை சாதி பெயர் சொல்லி இழிவாகபேசி, அவரின் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தமிழகஅமைச்சர் & காவல்துறை, தொடரும் சாதி தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாத தமிழகஅரசே அதற்க்கு உடந்தையாகவும் இருக்கும் அவலம். நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேசிய எஸ்சி ஆணையம்?? கடும் கண்டனங்கள் ! https://t.co/G4yNhsZDJq
— pa.ranjith (@beemji) May 28, 2020
சமீபத்தில் வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கரூர் கண்ணனை தமிழக அமைச்சர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுசெய்தார்; தாக்கினார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய எஸ்.சி. ஆணையம் புகார் பெற்றுள்ளது. புதிய தலித் மீட்பர்கள் அமைச்சரை சும்மா விட்டு விடுவார்களா என்ன? என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தனர். அதில், கரூர் மாவட்டம் வெளிச்சம் தொலைக்காட்சி மாவட்டச் செய்தியாளர் கண்ணன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறிக்கும்பல். இடத்திற்கு வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சாதிய வன்மத்துடன் பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? வேடிக்கை பார்க்குமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். அதில், வெளிச்சம் நிருபரை சாதிப் பெயர் சொல்லி இழிவாகப்பேசி, அவரின் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தமிழக அமைச்சர் & காவல்துறை, தொடரும் சாதி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாத தமிழக அரசே அதற்கு உடந்தையாகவும் இருக்கும் அவலம். நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேசிய எஸ்.சி. ஆணையத்திற்கு கடும் கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார்.