Published on 07/08/2019 | Edited on 07/08/2019
கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் சோனியா தான் பிரதமராக வர வேண்டும் என்று கூறிவந்தனர். அந்த சூழலில் தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சோனியாவிடம் சபதம் போட்டதாக சொல்லப்படுகிறது. இது பற்றி பார்த்த போது, அனைவரும் சோனியா தான் பிரதமர் என்ற போது, ஒரு வெளிநாட்டு பெண் இந்திய நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்றும் எல்லாரும் சொல்லும் போது எனது உணர்வுகள் நொறுங்கி போகின என்று தெரிவித்தார். இந்திய வெள்ளைக்காரர்களிடம் பல போராட்டங்களை கடந்து சுதந்திரம் பெற்றது.
அப்படி இருக்கும் போது நமது நாட்டை ஆட்சி செய்ய இந்தியாவில் யாருமே இல்லையா ஒரு வெள்ளைக்கார பெண்ணை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கொந்தளித்தார். அதோடு சோனியா காந்தி பிரதமரானால் எனது தலையை மொட்டை அடித்து கொண்டும், வெள்ளை சேலை கட்டி கொண்டும் வாழ்வேன் என்று உணர்ச்சிகரமாக கூறினார். மேலும் சோனியா பிரதமராக பதவி ஏற்றால் வெறும் தரையில் தான் தூங்குவேன் என்றும் தெரிவித்தார். அதே போல் ஆடம்பரமான உணவுகளை உட்கொள்ளாமல் எளிய உணவுகளை உண்டு வாழ்வேன் என்றும் கூறினார். இதன் பின்பு பிரதமராக மன்மோகன் சிங் பதவி ஏற்று பத்து ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தார்.