Skip to main content

"ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது" - உச்சநீதிமன்றம்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

supreme court talks about maharashtra state governor action

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால், கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. மேலும் சிவசேனாவானது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.

 

இது தொடர்பாக இருதரப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. அமர்வானது இந்த வழக்கு பற்றி குறிப்பிடுகையில், "ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதே நேரம் ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது. ஆளுநர்கள் இவ்வாறு அரசியலில் ஈடுபடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துவிடும். சிவசேனாவில் உட்கட்சிப் பிரச்சனை எழுந்தபோது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவசரம் காட்டினார். உட்கட்சிப் பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா? இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும்" எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில் தான் நீதிபதிகளின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தன்னால் வெற்றி பெற முடியாது எனக் கருதி உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து எப்படி அவரை பதவியில் அமர்த்த முடியும். ஒருவேளை அவர் சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தால் கூட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வது பற்றி நாங்கள் முடிவு எடுத்து இருக்க முடியும்" என்றனர்.

 

மகாராஷ்டிரா மாநில அரசியல் நெருக்கடி மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு; நீட் முடிவுகளை வெளியிட்ட தேசிய தேர்வு முகமை

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
The National Examination Agency released the NEET results

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ஆம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ஆம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையைத் தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ஆம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” எனச் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட 19ஆம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.  மேலும், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ஆம் தேதி பிற்பகல் வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, மையங்கள் வாரியான நீட் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பில்கிஸ் பானு வழக்கு; மீண்டும் குற்றவாளிகளுக்குக் கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Supreme Court dismisses plea of ​​accused in Bilkis Bano case

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த 2022 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை

அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக்  குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளும்  சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், குற்றவாளிகள் 3 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 11 போரும் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா கிளை சிறையில் சரணடைந்தனர். 

இந்த நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் தங்களது விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என 32 கீழ் குற்றவாளிகள் தரப்பில் இருந்து அரசியலமைப்பு சட்டம் 32 கீழ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை(19.4.2024) விசாரணைக்கு வந்தபோது, “உங்களுடைய அடிப்படை உரிமை எங்கே பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் இந்த மனுவை அரசியலமைப்பு 32இன் கீழ் தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த மனு அந்த பிரிவின் கீழ் தாக்கல் செய்ய உகந்தது அல்ல என்று கூறி குற்றவாளிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.