Skip to main content

பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் வங்கிக்கணக்கில் 10,000 போட வேண்டும்... காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்! 

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

mp

 


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே-31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,767- லிருந்து 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,337- லிருந்து 4,531 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426- லிருந்து  67,692 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 86,110 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கரோனா வைரஸை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கால் தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது எல்லாருக்கும் தெரியும். இதை முன்கூட்டியே இந்த அரசாங்கம் அறியாமல் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இதனால் தான் குறிப்பாக எங்கள் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஒவ்வொரு வங்கிக்கணக்கிலும் பணம் போட வேண்டும் என்று எல்லாருக்கும் முன்னாடியே இந்த ஊரடங்கு அறிவிப்பிற்கு முன்பே கூறினார். அதனால் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணமாக மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்