


Published on 18/02/2020 | Edited on 18/02/2020
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 161- வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலரின் சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கூடி கோஷம் போட்டால் உண்மை மறைந்து விடும் என நினைக்கிறார்கள்; அப்படி நடக்காது. டிஎன்பிஎஸ்சி விவகாரம் தொடர்பாக திமுக ஆட்சியிலும் சோதனை நடந்துள்ளது. 2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. அதிமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால் தான் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் 40- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்." இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.