Skip to main content

வாட்ஸ் ஆப், யூ டியூப் பார்க்கிறது இல்லையா? நல்லா கை தட்டுங்கள்... -செல்லூர் ராஜ் பேச்சு 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019 

தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 

Sellur K. Rajuஇந்த விழாவில் கூட்டுறவுத்துறை துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ஏன் எல்லோரும் அமைதியா இருக்கீங்க?. தேனி வந்தா சுறு சுறுப்பா இருப்பீங்கன்னு பார்த்தா, இப்படி இருக்கீங்களே? கை தட்டினா இதயத்துக்கு நன்கு ரத்த ஓட்டம் இருக்கும். வாட்ஸ் ஆப், யூ டியூப் பார்க்கிறது இல்லையா? கை தட்டுனா உடம்புக்கு ரொம்ப நல்லது. நல்லா கை தட்டுங்கள் என்று அவர் பேச ஆரம்பித்ததும். கூட்டத்தில் கலகலப்பு தொடங்கியது. 
 

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ஓபிஎஸ்க்கு பலரும் விளக்கம் சொல்வார்கள். நான் சொல்கிறேன். ஓ ஒற்றுமை, பி பாசம், எஸ் சேவை எனக் கூறினார். மேலும், துணை முதல்வரான "ஒபிஎஸ் வேட்டி கட்டிய அம்மா" என்று புகழ்ந்ததுடன் மட்டும்மல்லாமல்  இரண்டு கவிதைகளை கூறி  ஓபிஎஸ்சை  வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என புகழ்ந்து பேச்சிலேயே நெருக்கம் காட்டியவர், இரண்டு வருடங்களுக்கு மேல் இத்துறையில் யாரும் இருந்ததில்லை இன்றோடு எனக்கு இத்துறையில் ஒன்பது வருடங்கள் ஆகிறது. இந்தியாவுக்கே முன்னோடியாக அதிக விருதுகளை பெற்றுள்ள துறையாக உள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். வாங்கிய கடனை நீங்கள் கட்டி விடுவீர்கள். பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பீர்கள் தேனி மக்கள் பாசக்காரர்கள் என்றார்.
 

இந்த விழாவில் ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமார், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

 


  

சார்ந்த செய்திகள்

 

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்; “உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” - டெல்லி அமைச்சர்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Delhi Minister spoke about Bail for Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜகவுக்குத் தெரியும். அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், இன்னொரு சதித்திட்டத்தை தீட்டி, ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நாளில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அவர் ஏன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்? ஏனென்றால், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, 10 மடங்கு வேகமாக டெல்லி மக்களுக்காகப் பணியாற்றுவார். இன்றைக்கு பிஜேபிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும் உங்கள் சதி திட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி வருகிறது. பா.ஜ.க.வுக்கு மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வந்து மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துங்கள். உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார். 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.