![SDPI party involved in struggle to repeal CAA law](http://image.nakkheeran.in/cdn/farfuture/aowaeGVcPOBKig_WWiRzMOKJAksKuYRhWqc0nrQpw5o/1622549782/sites/default/files/2021-06/caa-1.jpg)
![SDPI party involved in struggle to repeal CAA law](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q63AFvvvWc6FgJ9rGszPhjC8kAyd928nDclmbmoWmnk/1622549782/sites/default/files/2021-06/caa-2.jpg)
![SDPI party involved in struggle to repeal CAA law](http://image.nakkheeran.in/cdn/farfuture/PPmq_6YkMwFPdrgL2g5M4rswcQypvi_mQGeb61E8dmk/1622549782/sites/default/files/2021-06/caa-3.jpg)
![SDPI party involved in struggle to repeal CAA law](http://image.nakkheeran.in/cdn/farfuture/i2xF_VZhDyVngesfLRwpJynUdOkpRRlF_SYqTCGaAJQ/1622549782/sites/default/files/2021-06/caa-4.jpg)
Published on 01/06/2021 | Edited on 01/06/2021
"கரோனோ தொற்றின் பேரழிவை கட்டுப்படுத்துவதில் அடைந்த படுதோல்வியை மறைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்பும் மத்திய மோடி அரசின் மலிவான சி.ஏ.ஏ. அரசியலை நிராகரிப்போம்" என்ற கோஷத்துடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தும் தேசம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று(01.06.2021) எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் சென்னை மண்டல செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர் ரத்தினம், செயற்குழு உறுப்பினர் பசீர் சுல்தான், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன், வடசென்னை மாவட்ட தலைவர் ரசீத், மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சி.ஏ.ஏ. சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.