Skip to main content

“சாத்தான்குளத்தில் தவறு செய்தவர்களை முதல்வர் காப்பாற்ற மாட்டார்..” -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி! 

Published on 30/06/2020 | Edited on 30/06/2020
K. T. Rajenthra Bhalaji

 

சிவகாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்,  சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும், கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பதில்களும்.. 


கேள்வி: கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்கிறாரே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி?

பதில்: குறை கூறுபவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். கரோனா தாக்கத்தினால் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடோ, மின் தடையோ,  வேறு எந்த ஒரு பிரச்சனையுமோ மக்களுக்கு இல்லை. 

 

கேள்வி: சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களைக் காப்பாற்ற நினைக்கிறாரா தமிழக முதல்வர்?

பதில்: சாத்தான்குளம் சம்பவத்தில், தவறு செய்தவர்களைக்  காப்பாற்றும் முயற்சியை முதல்வர் ஒருபோதும் எடுக்க மாட்டார்.  அதனால்தான்,  சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார்.  

 

கேள்வி: கரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது, முதல்வரும் அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களையும், அதிகாரிகளையும் பணி செய்யவிடாமல் தடுத்து, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்று விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டுகிறாரே? 

பதில்: மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என  யாருமே கிராமப் பகுதிகளுக்குள் செல்லவில்லை என்றால், மக்களுக்கு பயம் வந்துவிடும். அதனால்தான் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறோம்.  கரோனாவுக்கு முதலில் மருந்தே மன தைரியம்தான். மன தைரியத்தைக் கொடுக்கும் ஒரு ஆட்சியாக,  எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது.  மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளை எதற்காகவும், எப்போதும், பணி செய்யவிடாமல் தடுப்பது கிடையாது. அவர்கள் அனைவருமே அவர்களது பணியை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

கேள்வி: மு.க.ஸ்டாலின் கூறும் அறிவுரைகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை?  

பதில்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் கூறும் அறிவுரைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருந்தால், முதல்வர் ஏற்றுக் கொள்வார். அவை, அக்கப்போராக அல்லவா இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.