சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஹோட்டலில் பணியாற்றிய ராமசாமி என்பவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இதனால் ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கொலை செய்தார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கடந்தாண்டு மரணமடைந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_41.jpg)
ஜீவஜோதி தனது கணவர் இறப்புக்கு பிறகு, தஞ்சை மாவட்டத்தில் குடிபெயர்ந்தார். அதன் பின்பு தன் பள்ளி நண்பரை மறுமணம் செய்து தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் போதும்தானே. அதனால்தான் கட்சியில் இணைந்துள்ளேன். என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்று உயிருடன் உங்களுடன் பேசி கொண்டிருப்பதற்கு ஜெயலலிதாதான் காரணம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/362_1.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திட்டங்களை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும், அதனால்தான் அவருக்கு ஆதரவு பெருகுகிறது என்றும், ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் வேலையை செய்கிறார்கள்.. இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.. பாதுகாப்புக்காக நான் பாஜகவில் சேரவில்லை.. எனக்கு எப்பவுமே பயம் கிடையாது.. பயம் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன்... தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக அசுர வெற்றி பெறுவதை பார்க்கத்தான் போறீங்க.. குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியினருக்கு புரிதல் இல்லை.. அதனால்தான் குற்றம் சாட்டுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன்.. ஏனெனில் பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.. இந்த கெத்து யாருக்கு வரும்.. இந்த விவகாரத்தில் ரஜினிக்குதான் ஆதரவு பெருகி கொண்டு போகிறது" என்றும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)