Skip to main content

“ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000” - கருணை இல்லா அரசு என சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

"Rs. 4000 ticket price is Rs. 80,000" S. Venkatesan's obsession with the government without mercy

 

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கை என்பது சில சடலங்களை இரண்டு எண்ணப்பட்டதே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  காயமடைந்தவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களைத் தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

 

இந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் அவர்களைத் தொடர்பு கொள்ளத் தமிழக அரசு தொடர்ந்து முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். 

 

இந்நிலையில், ஒடிசாவிற்குச் செல்லும் விமானங்களில் பயணச் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தைக் கூட லாப வெறிக்குப் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை... 4000 ரூபாய் டிக்கெட் 24,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்"என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா!* கருணை இல்லா அரசே...* உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்!” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Notification of date for consultative meeting of 'India' alliance
கோப்புப்படம்

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதே சமயம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் மிஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

“மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
There will be no major announcements in the Union Budget Union Minister Nirmala Sitharaman

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் டெல்லியில் சிஐஐ சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “2024 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மரபுப்படி இடைக்கால பட்ஜெட்டாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே வரும் பிப்ரவரியில் பட்ஜெட், செலவு மானியக் கோரிக்கையாகவே தாக்கல் செய்யப்படும். அவ்வாறு  தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது” எனத் தெரிவித்துள்ளார்.