மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தைப் போக்கும் விதமாக தமிழக உள்ளாட்சித் துறையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் முதன் முதலாக ரோபோக்களை பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
முதல் கட்டமாக, கோவை மாநகராட்சிக்காக சி.எஸ்.ஆர். நிதி மூலம் 37 லட்ச ரூபாயில் ஒரு ரோபோ வாங்கப்பட்டுள்ளது. தற்போது, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோவை அமர்த்தியுள்ளனர். ரோபோவின் பணிகள் சிறப்பாக இருந்ததால் மேலும் 3 ரோபோக்களை வாங்குவதற்கு ஒப்புதல் தந்துள்ளார் அமைச்சர் வேலுமணி.
இதற்கிடையே, மனித கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோவின் செயல் திறன் மாநகராட்சி அதிகாரிகளாலும் கோவை நகர மக்களாலும் பாராட்டப்படுவதால் தமிழகம் முழுவதுமுள்ள மாநகராட்சிகளில் ரோபோக்களை களமிறக்கவும் முடிவு செய்து 100 ரோபோக்களை கொள்முதல் செய்வதற்கான செயல்முறை ஆணைகளுக்கு உத்தரவிட திட்டமிட்டுள்ளார் வேலுமணி. உள்ளாட்சித் துறையில் இந்த திட்டம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.