Religion is of no use - Seaman

நாம் தமிழர் கட்சியின் கொங்கு மண்டலம் சார்பில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

Advertisment

கூட்டத்தில் பேசிய சீமான், “உலகிலேயே மிக உயர்ந்தவர் யாரென்று தெரியுமா? கீழே விழுந்து கிடக்கும் முடியாத ஒருவனை கை கொடுத்துத்தூக்கிவிடக் குனிபவன் தான் உலகிலேயே மிக உயர்ந்தவன்.

Advertisment

மேடையில் நின்று பேசுவதால் என் முகம் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், மேடை போட்டு அதற்கு ராப்பகலாக உழைத்தவர்களை யாருக்கும் தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும்.

அனைவரும் உயிர் நீத்தது எதற்காக என்றால், தமிழீழ மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக;தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக. தாய்மொழி தமிழில் இருக்க வேண்டும். தேசிய கீதம் தமிழில் ஒலிக்கும். சாமி, சாதி, மதம் இல்லாமல் நீ வாழ்ந்து விடலாம். நிலமும் வளமும் நீரும் காற்றும் இல்லாமல் எப்படி வாழ்வீர்கள்?

Advertisment

மண்புழு கூட மனித வாழ்க்கைக்குப் பயன்படும். மதம் ஒன்றுக்கும் பயன்படாது. தெய்வத்தை வழிபடு. இறைவனை வழிபடு. அதற்கு எதற்கு மதம்?தமிழில் இல்லாத மந்திரமா!” எனப் பேசினார்.