கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கொடநாட்டில் இருந்த சொத்துகள், காணாமல் போன பொருட்கள் குறித்து அவரிடம் விசாரணையானது நடத்தப்படுகிறது. கொடநாட்டில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கிடைத்தது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் கொடநாடு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.