/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/05_54.jpg)
கல்லால் நிறுவன வழக்கில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
கல்லால் குழு அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் சொத்துகள் கல்லால் நிறுவனத்திடம் இருந்ததாகவும் அமலாக்கத்துறை அதை முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கல்லால் நிறுவனத்திடமிருந்து ரூ.8.5 கோடி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லைகா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி ஜி.கே.எம்.குமரனின் ரூ.15 கோடி மதிப்புள்ள தி.நகர் இல்லத்தையும் வழக்கில் இணைத்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)