நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் குப்பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் என் ஆதரவு கிடையாது’’என்று தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மன்றத்தினருக்கு, ‘’வரும் நாடாளூமன்ற தேர்தலில் என்னுடையை படத்தையோ, மன்றத்தின் கொடியையோ யாரும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது . தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பவர்கள் யார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் நாடாளூமன்ற தேர்தலில் வாக்களியுங்கள்’’என்று தெரிவித்துள்ளார்.