Skip to main content

ராஜேந்திர பாலாஜி பேச்சும்; அண்ணாமலையின் ரியாக்‌ஷனும் 

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Rajendra Balaji  spoke; Annamalai's reaction

 

அதிமுக - பாஜக கூட்டணியில், அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. அப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கும் அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. 

 

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியபோது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக, முன்னாள் முதல்வர் அண்ணா குறித்துப் பேசியதற்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியையே முறித்து வெளியேறியது. 

 

Rajendra Balaji  spoke; Annamalai's reaction
கோப்புப் படம் 

 

இந்நிலையில்தான் அதிமுகவின் 52ம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எடப்பாடி சொல்லுகின்ற பிரதமர்., ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், எடப்பாடியின் கரம் ஓங்கினால் டெல்லியில் எடப்பாடி சொல்லக்கூடியது நடக்கும்” என ஆக்ரோஷம் பொங்க பேசினார்.  

 

Rajendra Balaji  spoke; Annamalai's reaction

 

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வி கேட்டதும் அண்ணாமலை சிரித்தார். பிறகு பேசிய அவர், “சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 'கொடநாடு பங்களா'- நீதிமன்றம் அனுமதி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
'Kodanadu Bungalow' under scrutiny - Court

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்றைய தினம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகையில் இருக்கக்கூடிய மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர்.

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என எதிர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர் கடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் ஏற்கெனவே கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட பங்களாவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இருக்கக் கூடிய தடயங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

மக்களைத் தேடி தி.மு.க; அதிகாரிகளைத் தேடி அ.தி.மு.க - சூடு பிடிக்கும் பாராளுமன்றத் தேர்தல் களம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மக்களைத் தேடி பேரூராட்சி என்று திட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டுக்கு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

கே.கே நகர் பகுதியில் எரியாத மின்விளக்குகள் திமுகவினர் குறை கேட்கச் சென்ற மறுநாளே 26 இடங்களில் பளிச்சென விளக்கு எரியத் தொடங்கியது. இந்த விஷயம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து திமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் வேகம் காட்டி வருகின்றனர். சுதாரித்துக் கொண்ட அதிமுகவினர் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அதிகாரிகளை தேடி அதிமுக என்ற திட்டத்துடன் வத்தலக்குண்டு பேரூராட்சி பகுதியில் முக்கிய பிரச்சினைகளை கையில் எடுத்து அது சார்ந்த பொதுமக்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளை தேடிச் சென்று மனு கொடுக்கும் நிகழ்வை தொடங்கியுள்ளனர்.

AIADMK DMK is competing attracting people as parliamentary elections are coming up

காந்திநகர் பகுதியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் குறைந்த கிலோ வாட் டிரான்ஸ்பார்மரை அதிக கிலோ வாட் ட்ரான்ஸ்ஃபராக மாற்றி அமைத்து தர வேண்டும் என நகர அதிமுக நகர சிறுபான்மையின் அணி அமைப்பாளர் நாகூர் கனி தலைமையிலான அதிமுகவினர் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர். 

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் மக்களை நேரடியாக சந்திக்கும்போது எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தங்களை தயார்படுத்தி வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.