
நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன். புதுச்சேரியில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நெல்லித்தோப்பு பகுதியில் அவரை வழிமறித்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிய மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மணிகண்டனை வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.