


Published on 14/02/2022 | Edited on 14/02/2022
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி 167-வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துர்கா தேவி நடராஜன் போட்டியிடுகிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் துர்கா தேவிக்கு இன்னும் ஆறே வாரங்களில் பிரசவம் ஆக இருப்பதுதான். மகப்பேறுக்குத் தயாராகி வரும் நிலையிலும், துர்கா தேவி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருவது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயாராகவும் கவுன்சிலராகவும் இரட்டை மகிழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள துர்கா தேவி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறார்.