Skip to main content

இது அரசு விழாவா? அல்லது கட்சி நிகழ்ச்சியா? முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

ddd

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாளைக் கொண்டாட தமிழக மக்களுக்கு 2,500 ரூபாய் பணமும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். 

 

அதன்படி இன்றுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்குமான பொங்கல் பரிசு 2500 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இன்று (04.01.2021) தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுப் பொருட்களையும் 2500 ரூபாய் பணமும் வழங்கி, பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு மற்றும் 2,500 ரூபாய் பணம் கொடுக்கும் நிகழ்ச்சியைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டடோர் தொடங்கி வைத்தனர்.

 

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,224 நியாயவிலைக் கடைகளும், 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு நியாயவிலைக் கடைகளில் 2500 ரூபாய் பணம் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு வழங்கப்பட்டது.

 

குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு வாங்குவதற்காக வந்து வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, சிந்தாமணி நியாயவிலைக் கடைகள் அதிமுகவின் கொடிகளும் வரவேற்பு கொடுப்பதற்காக கட்சிக்காரர்களும் சூழ்ந்து நின்றதால் ‘இது அரசு விழாவா அல்லது கட்சி நிகழ்ச்சியா’ என்று பொதுமக்கள் முணுமுணுத்துச் சென்றனர்.

 

மேலும் துறையூர் பெருமாள் மலை பகுதியில், இன்று துவங்க உள்ள அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு, அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி கலந்துகொண்டு மினி கிளினிக்கைத்  திறந்து வைத்தார்.

 

அரசின் திட்டமான மினி கிளினிக் அரசு அதிகாரிகளால் திறக்கப்பட வேண்டுமே தவிர, கட்சி உறுப்பினர்களால் திறக்கப்படுவது ‘இது அரசு விழாவா அல்லது கட்சி நிகழ்ச்சியா’ என்ற கேள்வியை பொதுமக்களிடையே எழுப்பியுள்ளது.

 

கிராமங்களில் உள்ள விவசாயப் பெருமக்களும் பிற தொழில் சார்ந்து இருக்கக்கூடிய ஒவ்வொரு பொதுமக்களும் முதலுதவி பெறுவதற்காக அரசின் மினி கிளினிக் தொடங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். முதல்வர் என்பவர் கட்சி சாராதவராகவும் அரசின் நலனில் அக்கறை உள்ளவராவுகம் செயல்பட வேண்டிய நிலையில், இதுபோன்று அரசு நிகழ்ச்சிகளைக் கட்சி நிகழ்ச்சிகளைப் போல நடத்த அனுமதிப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இது அதிமுக கட்சி சார்பில் திறக்கப்படும் கிளினிக்கா? அல்லது அரசின் திட்டமா என்ற சந்தேகம் தங்களுக்கு எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘தமிழகத்திற்கு நீர் திறக்கப்படும்’ - முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Water will be opened to Tamil Nadu CM Siddaramaiah announcement

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று (14.07.2024) அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பாஜக மாநில தலைவர் சி.டி.ரவி, நீர்ப்பாசனத்துறை துறை அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பாஜக தலைவர்கள், மைசூரு ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முன் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 

Water will be opened to Tamil Nadu CM Siddaramaiah announcement

இருப்பினும் காவிரியில் நீர் இருப்பின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நாளை (15.07.2024) முதல் 8 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் இந்த எண்ணிக்கையை அதிகரிப்போம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனைச் சட்ட ஆலோசனை குழுவின் உறுப்பினர் மோகன் கட்டார்கி முன்மொழிந்தார். எனவே நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்குத் திறக்க முடியாது. இந்த மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி என மொத்தமாக 20 டிஎம்சி நீர் திறக்க வேண்டுமெனக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்தார். இதன் மூலம் ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி (11 ஆயிரத்து 500 கன அடி) தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைக் கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வரலாற்று சாதனை படைத்த தமிழக பதிவுத்துறை! 

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
TN Registration Dept has made a historic record

சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று (12.07.2024) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

இதனையடுத்து ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று (12.07.2024) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டன. அதோடு அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டன. 

TN Registration Dept has made a historic record

இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் ஆவணப்பதிவுகள் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று (12.07.2024) ஒரே நாளில் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ. 224.26 கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 310 ஆவணங்கள் பதிவாகியுள்ளன எனத் தமிழக பத்திரப்பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.