Skip to main content

ஆளுநர் மாளிகையில் அதிரடிப்படை குவிப்பு - புதுச்சேரியில் பதற்றம் நீடிப்பு

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
pu

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அதிவிரைவு அதிரடிப்படை வந்தது.   புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் இன்று 2வது நாளாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்டம் ஒழுங்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம்  அதிவிரைவு அதிரடிப்படை குவித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஆளுநர்  கிரண்பெடியை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கருப்பு வேட்டி, சட்டை அணிந்து விடியி விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

 

2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம்  அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படையை  குவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பதற்றம் நீடிக்கிறது.

 

சார்ந்த செய்திகள்