Skip to main content

அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

Published on 05/03/2023 | Edited on 05/03/2023

 

 Police registered a case against BJP leader Annamalai

 

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக முதல்வர் நேற்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு 'இந்தியாவில் இதுபோன்ற போலி செய்திகளைப் பரப்புவது இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்' என தெரிவித்திருந்தார். தமிழக டிஜிபி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை வந்திருந்தது. அதில் இதுபோன்ற போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் பிஜேபியின் டிவிட்டர் பக்கத்தை கையாளும் பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

NN

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில், 'திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் காரணம். திமுக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கை அடிப்படையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வேண்டும்;  காவல்நிலையத்தில் மனு!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Petition to police station for permission to hold a hunger struggle

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி முன்னாள் முதல்வர்கள் வேடம் அணிந்து மனுக் கொடுத்த நடனக் கலைஞர்கள். 

திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நல சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் வேடமணிந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானின் அறிவிப்பின்படி ஜோலார்பேட்டை, கந்திலி, குரிசிலாப்பட்டு, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நடன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என மாவட்ட காவல் நிர்வாகம் தடை செய்துள்ளது. 

இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரம் இந்த நடனத்தை நம்பியே உள்ளது.  தற்போது, இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்களின் நிலையை விளக்க காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என்ற போது,  அவர் நேரம் ஒதுக்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் வருகின்ற 18ஆம் தேதி வியாழக்கிழமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சட்ட விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறநிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த திட்டமிட்டுள்ளோம். ஆகையால் உண்ணவிரத அறப்போராட்டத்திற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Next Story

நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Nayanar Nagendran appeared before the CBCID investigation

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏபரல் மாதம் 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பாஜகவின் தமிழக சட்டமன்ற குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று (16.07.2024)) காலை ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.