PM's mother admitted to hospital; Prime Minister who flew to Ahmedabad

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெண் குஜராத் மாநிலம் காந்தி நகரின் ரைசன் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபெண் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார்.இந்நிலையில் ஹீராபெண் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். பிரதமர் மோடியும் விமானம் மூலம் அகமதாபாத் வந்து மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, “தாய்க்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் அன்பு முடிவில்லாதது மட்டும் விலைமதிப்பற்றது. அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமரின் தாய் ஹீராபெண் விரைவில் குணமடைய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.