Skip to main content

தனது நிலையில் மாறாத பாமக நிறுவனர் ராமதாஸ்! அப்செட்டான கட்சிகள்! 

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

நேற்று தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் வருவாரா என்று கேள்வி எழுந்தது. மேலும் தனது வாக்குறுதியை மீறினால் விமர்சனங்கள் வரும் என்ற சூழலில் படத் திறப்பு விழாவுக்கு வரவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

pmkஅதோடு முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,   "அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்! உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
 DMK candidate filing nomination on Vikravandi by-election

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதே போல், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று (19-06-24) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பிக்கள் ரவிக்குமார் மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிடோர் உடன் இருந்தனர். இதனிடையே, இன்று மாலை நேரத்தில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.