சேலத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு நல்லாட்சி செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

gk mani

நாட்டின் 17-வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதிவரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பெயர்களை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில் ஆளும் அதிமுகவுடன் பாமக கட்சி கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது.

இந்த நாடாளமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துவந்தனர். ஆனால், தேர்தல் கூட்டணிக்குபின் இவர்கள் இருவருமே அதிமுகவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிவருகின்றனர்.

Advertisment

இவர்களை தொடர்ந்து தற்போது பாமக தலைவர் ஜி.கே.மணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியுள்ளார். சேலத்தில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அசாத்தியமான துணிச்சல்மிக்க தலைவராக ஜெயலலிதா திகழ்ந்தார் என்று ராமதாஸ் என்னிடம் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி செய்து வருகிறார். அதேபோல் சிறப்பான கூட்டணியையும் அவர் அமைத்துள்ளார் என்று அவர் பேசினார்.