Skip to main content

ரோட்டை மறித்து  இ.பி.எஸ்-க்காக மேடை!  தே.மு.தி.க.வை மதிக்காத அ.தி.மு.க!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அ.தி.மு.க.விற்கு அடித்தளம் போட்டதே திண்டுக்கல் மாவட்டம் தான். அப்படியிருந்தும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான  எஸ்டிபி கட்சிக்கு ஒதுக்கியதின் பேரில் மாநிலத்தலைவரான நெல்லை முகமதுமுபாரக் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் அ.தி.மு.க.வை உருவாக்கிய தொகுதியை கூட்டணி கட்சிக்கு  முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும்  ஒதுக்கியதால் கட்சிக்காரர்களே மனம் நொந்துபோய் தேர்தல் பணியில் ஆர்வம்  காட்டாமல் இருந்து வந்தனர். 

ஆனால் தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி  தற்போது தேர்தல் பணியில் ர.ர.க்கள் ஈடுபட்டும் வருகிறார்கள். அதை தொடர்ந்து  ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் போட்டதை  தொடர்ந்து தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியிலும் முன்னாள்  அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதனுடன் வேட்பாளர்  முகமது முபாரக் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  இந்த நிலையில் தான் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி  அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதுபோல் இன்று  மாலை 4 மணியளவில் தேனி பங்களாமேடில் அ.தி.மு.க. வேட்பாளர்  நாராயணசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அதைத் தொடர்ந்து  திண்டுக்கல்லில் உள்ள மணிக்கூண்டில் பிரம்மாண்டமாக போடப்பட்ட பிரச்சார  மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கூட்டணி கட்சியான எஸ்டிபி  கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஆதரவு திரட்டி இரட்டை இலைக்கு ஓட்டு  கேட்க இருக்கிறார். இதற்காக மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதியில் இருந்து  ஆயிரக்கணக்கான கட்சிக்காரர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து  கொள்ள இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. மாவட்டநிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கு தேர்தல்  பிரச்சாரத்திற்கு இபிஎஸ் வருவதை தெரியப்படுத்தவில்லையாம். அதனால்  நிர்வாகிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பஸ் ஸ்டாண்ட்  அருகே உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசனும், விஸ்வநாதனும்  அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் கூட்டணி கட்சிகுள்ளேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் மாநகரின் மைய பகுதியான மாநகராட்சி  அருகே பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதற்காக மூன்று ரோடை மறித்து மிக  பிரம்மாண்டமாக மேடை நேற்று இரவிலிருந்து போடப்பட்டது. 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

அந்த மேடையில்  தனியாக ஒரு பகுதியில் ரெடிமேட் பாத்ரூம் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.  இதனால் அப்பகுதியில் வியாபாரிகள் தங்கள் கடைகளை சரிவர திறந்து  வைக்கவும் முடியவில்லை அதுபோல் அப்பகுதிகளில் மக்கள் நடமாட கூட  முடியாத அளவிற்கு ரோட்டை மறித்து ஸ்பீக்கர்களையும், பேரிகார்டு மற்றும்   தப்பகுச்சிகளில் மின்அலங்கார லைட்டில் தலைவர்கள் படங்களையும்  ரோடுகளில் பல பகுதிகளில் போட்டு ரோட்டை மறித்து வைத்து இருக்கிறார்கள்.  இதனால் பொதுமக்கள் டூவீலர்களிலும், நடந்தும் கூட செல்ல முடியாமல்  மாநகராட்சியை சுத்தி  செல்கிறார்கள். 

People will suffer if block the road in Dindigul and set  campaign for eps

ஒரு மிகப் பெரிய கட்சியின்  பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தேர்தல்  பிரச்சாரத்திற்கு திண்டுக்கல் வருகிறார் என்றால் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில்  ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் பிரச்சார மேடை அமைத்து இருக்கலாமே தவிர  நகரின் மையப் பகுதியில் போட்டு மக்களின் தினசரி வாழ்வாதாரத்தை சீரழிக்கும்  வகையில் அதிமுகவினர் பிரச்சார மேடையை போட்டு இருப்பதை கண்டு  திண்டுக்கல் மாநகர மக்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்களாம்..

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
ADMK former minister MR. Vijayabaskar arrested

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். இதனால் கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமின் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரது சகோதரரும் சேகரும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.

Next Story

‘மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Electricity hike should be rolled back immediately EPS Emphasis

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள  திமுக அரசுக்கு என் கடும் கண்டனம்.

பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர். மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த அரசுக்கு? ‘சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்’ என்று மேடைதோறும் பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!.

உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!. மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும்  திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

The website encountered an unexpected error. Please try again later.