Skip to main content

நாடாளுமன்றம் வரை சென்ற ‘பதான்’ பட சர்ச்சை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

pathan movie controversy in parliament in lok sabha 

 

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய பதான் படம் தொடர்பாக நேற்று மக்களவையில் பகுஜன் சமாஜ்வாதி  கட்சி எம்.பி.  ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை, கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.

 

pathan movie controversy in parliament in lok sabha 

 

இது குறித்து மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி  பேசிய போது, "பதான் திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலரும் கோரிக்கை விடுகிறார்கள். உலமா வாரியத்தில் இருப்பவர்களும் கேட்கிறார்கள். இது ஒரு புதிய வழக்கமாகி விட்டது. சினிமாவுக்கு ஒப்புதல் அளிப்பதையோ , தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல. அதேபோல், இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்க கூடாது" என்று பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.பிக்கு அறை விட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Bahujan Samaj Party executive leaves room for MP in maharashtra

மகாராஷ்டிரா  மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (17-07-24) தாதர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி கவுதம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது, அக்கட்சியைச் சேர்ந்த நிமா மோஹர்கர் என்ற பெண், எம்.பி கவுதமை அறைந்தார். இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தியதில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பண்டாரா-கோண்டியா தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு கிடைக்காததால் பிஎஸ்பி தொண்டரான நிமா மோஹர்கர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், எம்.பி கவுதமை தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதால், மொஹர்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் டோங்ரே கூறுகையில், ‘கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொஹர்கர் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலில் அவர் வலுவான வேட்பாளராக இருப்பார் என்பதில் கட்சிக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இவ்வாறு நடந்துகொள்வதை ஏற்க முடியாது. அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், மேலும் அவர் மீது தாதர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். 

Next Story

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி (படங்கள்)

Published on 07/07/2024 | Edited on 07/07/2024

 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி சென்னை வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.