Skip to main content

மக்களவைத் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு ப.சிதம்பரம் சவால்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
P. Chidambaram challenge to BJP on Lok Sabha elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, ப.சிதம்பரம் இன்று (06-04-24) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒன்றிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மாநில உரிமைகள் குறித்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள 12 அம்சங்களில் ஏதாவது ஒன்றை ஏற்க பா.ஜ.க தயாரா?. 

தி.மு.க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், தி.மு.க அமைக்கவில்லை. ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை குறைப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. செஸ் வரி குறைக்கப்படும் போது பெட்ரோல், டீசல் விலை தானாகவே குறையும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

'தமிழகம் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது'- வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
'Tamilnadu is below Uttar Pradesh'- Vanathi Srinivasan reviews

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலரும் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த நிர்வாகியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பேசுகையில், ''சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு என்பது திரும்பத் திரும்ப குறிப்பாக நடுத்தர ஏழை மக்கள் மீது மிகப்பெரிய சுமையை தமிழகத்தை ஆட்சி செய்யும்  திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த கட்டண உயர்வால் மின்சாரத் துறைக்கு 6000 கோடி ரூபாய் கூடுதல் வாரியாக கிடைக்கும் என சொல்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் குறிப்பாக போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து சேர்க்கின்ற போக்குவரத்து கட்டணம் என்பது கடுமையாக உயரப்போகிறது. இவை மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற சுமை போதாதென்று இப்போது இந்த மின் கட்டண உயர்வால் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுடைய விளையும் உயரப்போகிறது.

பல்வேறு விதங்களில் மக்களை பாதிக்கக்கூடிய இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. நிதிச் சுமை என சொல்லும் தமிழக அரசு, ஜிஎஸ்டி வரிவசூலில் உத்தரபிரதேசத்தை விட கீழே உள்ளது. தமிழகத்தின் நிதி நிலைமை உயர்த்த சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நிதி விற்பனர்களை எல்லாம் வைத்து கமிட்டி போடுகிறோம் என்று முதல் பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இதுவரைக்கும் சர்வதேச முக்கியஸ்தர்கள், விற்பனர்கள் என்ன இந்த அரசுக்கு வழிகாட்டுதல் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசு தான் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கி இருக்கின்ற அரசு'' என்றார்.