அமமுக கட்சியிலிருந்து விலகிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 17.6.2019 அன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களுக்கான அட்டைகளும் வழங்கப்பட்டன.

Advertisment

eps-admk-ammk-nellai-join

Advertisment

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு அமமுக சார்பில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மைக்கேல் ராயப்பன், மேலும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் பலர் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அமமுக மிகவும் வலுவாக இருந்த நெல்லை மாவட்டத்திலேயே அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவிற்கு வருவதால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.