கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றம் வரும் என்று பல தரப்பும் அழுத்தமாக நம்பும் நிலையில், மாநில உளவுத்துறை, இப்போது எடப்பாடிக்கு வேறுமாதிரியாக ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.யான ஈஸ்வர மூர்த்தி, முதல்வர் எடப்பாடிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார். அதில் 120 சீட் வரை அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கலாம்னு சொல்லியிருக்கார். அதேசமயம் எதிர்த்தரப்பு, ஏக உற்சாகத்தில் இருப்பதால் இ.பி.எஸ். ஒரு சோர்வாகவே காணப்படுகிறாராம்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இரணியா அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அடையாறில் உள்ள அரசு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஓய்வு எடுப்பதால் கட்சியினர் யாரும் அவரை நேரில் சந்திக்க செல்லவில்லை. முக்கியப் பிரமுகர்கள் அவரது உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேனியில் இருந்த துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். அப்போது தனக்கு அறுவை சிகிச்சை செய்தது எதற்காக என்றும் தற்போது நலமாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தேர்தல் முடிவு எப்படி இருக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். திமுகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டிருப்பது பற்றியும் ஆலோசித்துள்ளனர். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கின்றனர். அதிமுக சார்பிலும் ஏதாவது ஒரு மனு, புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்துதான் மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை முன்கூட்டியே பிரிக்க கூடாது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என மனு அளித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.