நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 24 கேபினேட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், தனிப்பொறுப்புகளுடன் கூடிய 9 இணை அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் ஒருவர்கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுதான் மிகவும் பரிதாபமான விஷயம்.
![ops raveendranath](http://image.nakkheeran.in/cdn/farfuture/0LyaMroKZdXiqouFP5fsJjHwacDnFymlE1u66cZYzgA/1559286253/sites/default/files/inline-images/ops-raveendranath.jpg)
அந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு துறையைச் சார்ந்த, கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு சென்ற அனைவரும் மீண்டும் திரும்பிய நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீர்ந்திரநாத் குமாரும் அங்கேயே இருந்துவிட்டனர். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வென்ற ஒரேயொரு நபர் அவர்மட்டும்தான். அதனால் அவருக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து பல நிகழ்வுகளும் அவ்வாறே நடந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று உறுதியானது. இதனால் அவ்விருவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதிமுகவிற்குள்ளேயே இருந்த உட்கட்சி பூசல்களும் இதற்கு காரணம். இந்நிலையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை உள்ளிட்டவர்கள் சென்னை திரும்பினர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும், ரவீந்திரநாத்தும் டெல்லியிலேயே தங்கிவிட்டனர்.