Skip to main content

இதுக்கெல்லாம் லீவு விடுங்க... இதுக்கு விட மாட்டீங்க... சீமான் போட்ட அதிரடி ட்வீட்!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவித்தும், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிக்க கோரியும் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தார். அதற்கு தமிழக அரசு தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறியிருந்தனர்.

 

seeman



இந்த நிலையில், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, முத்தமிழ் முருகனின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் தைப்பூசம் நாளினை அரசுப்பொது விடுமுறையாக, தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கோருகிறேன் என்றும், ஆரிய ஆகமவிதிக்கு உட்படாத அழகு,  தமிழின் மறுவடிவமாக உள்ள முருகன் மீது நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெரும் #தைப்பூசம்  பெருவிழாவை அந்த நாடு அரசுப்பொது விடுமுறையாக அறிவித்து உள்ளது என்றும், இந்த மண்ணிற்கு தொடர்பே இல்லாத பல்வேறு பண்டிகைகளுக்கு தமிழக அரசு விடுமுறைகளைக் கொடுத்துள்ளது. 


ஆனால், இந்த தமிழ் மண்ணில் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்ற தைப்பூசம் நாளுக்கு இன்றுவரை அரச விடுமுறை வழங்காதது மிகுந்த உள்நோக்கம் உடையது என்றும், தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப்பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் என எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறையை கொடுத்த தமிழக அரசு இதுவரை முருகன் தொடர்பான எந்த ஒரு விழாவிற்கும் விடுமுறை வழங்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்