தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் அனைத்து வகையான தொழில்நிறுவனங்களும் முடங்கிப்போனதால் ஊரடங்கின் முதல் நாளில் 2 லட்சம் கோடியாக இருந்த பொருளாதார இழப்பு, அடுத்தடுத்த நாட்களில் 5 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது 8 லட்சம் கோடி இழப்பை எதிர்கொண்டு வருகிறது இந்தியாவின் பொருளாதாரம்!

Advertisment

nirmala sitharaman

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது என மத்திய நிதி அமைச்சகத்துக்கு எச்சரிக்கை செய்துள்ளனர் பொருளாதார நிபுனர்கள்.

இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து பொருளாதார நிபுனர்களுடனும், நிதித்துறை அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃப்ரன்சில் ஆலோசனை செய்வதற்கான அனுமதியை மோடியிடம் கேட்டிருக்கிறாராம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.