Skip to main content

திமுகவில் புதிதாக உருவாக்கப்படுகிறதா இணைப் பொதுச்செயலர் பதவி? -அறிவாலய பரபரப்பு!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

dmk

 

தி.மு.கவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்காக கட்சியின் பொதுக்குழுவை வருகிற 9-ஆம் தேதி கூட்டுகிறார் மு.க.ஸ்டாலின். 'ஸும்' செயலி வழியாக நடத்தப்படும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம். 

 

பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார். பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சிலர் விரும்பினாலும் டி.ஆர்.பாலுவுக்கே வாய்ப்பு அதிகம் உள்ளது. துரைமுருகன் போன்றே டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். 

 

இதற்கிடையே இந்த பொதுக்குழுவில், சில புதிய பொறுப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அதாவது, தலைமை நிலைய  அமைப்புச் செயலாளராக கே.என். நேரு, இணைப் பொதுச் செயலாளர்களாக பொங்கலூர் நா. பழனிசாமி, பொன்முடி, எ. வ. வேலு ஆகியோர் நியமிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

பொருளாளர் பதவியை எதிர்பார்க்கும் சீனியர்களை சரிகட்டவும், பொதுச்செயலாளர் என துரைமுருகன் தனி அதிகாரம் செய்யாமல் இருப்பதை தடுக்கவும் இணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுவதாக கிசு கிசுக்கிறது அறிவாலயம்!

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர். 

Next Story

நீட் தேர்வு முறைகேடு; திமுக போராட்டம் ஒத்திவைப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
NEET examination malpractice DMK struggle postponed

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.