Skip to main content

''ஸ்டாலினின் துபாய் பயணம் முதலீட்டை ஈர்க்கவா... குடும்பத்திற்கு புதிய தொழில் துவங்கவா?''-இபிஎஸ் விமர்சனம்!

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

Stalin's trip to Dubai to attract business investment ... to start a new business for the family? -admk EPS

 

முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்லவில்லை மாறாக அவரது குடும்பத்திற்கு தொழில் துவங்க அங்கு சென்றுள்ளதாக தெரிகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வரின் துபாய் பயணத்தை விமர்சனம் செய்துள்ளார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''துபாய்க்கு சென்று தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகவும், அங்கு கண்காட்சி அரங்கைத் துவக்கி வைப்பதற்கும் முதல்வர் சென்றார் என்றால் அது சரி, ஆனால் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை ஒரு குடும்ப சுற்றுலாவாக தான் மக்கள் பார்க்கிறார்கள். தனி போயிங் விமானத்தை எடுத்து குடும்ப உறுப்பினர்களை அந்த விமானத்தின் மூலமாக துபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதற்கு முன்பாகவே ஸ்டாலினுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். துபாய் சென்றது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா இல்லை அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்கா என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். மக்களுடைய பார்வைக்கு அப்படித்தான் தெரிகிறது. ஏனென்றால் இவர் மட்டும் போயிருந்தால் பரவாயில்லை. அந்தத் துறையைச் சேர்ந்த செயலாளர் போயிருந்தால் பரவாயில்லை. அந்தத் துறையின் அமைச்சர் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் குடும்பமே துபாய்க்கு செல்கின்ற பொழுது மக்களுக்கு நன்மை செய்ய, தமிழ்நாட்டுக்கு தொழில் துவங்க அங்கே செல்லவில்லை துபாய்க்கு சென்றது அவரது தனிப்பட்ட காரணத்திற்காக தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 

இவர்கள் அங்கே புதிய தொழில் தொடங்குவதற்காக சென்றதாக மக்கள் பேசிக் கொள்வதை எங்களால் கேட்க முடிகிறது. சர்வதேச வர்த்தக கண்காட்சி துவங்கப்பட்ட நாள் 1.10.2021. முடியும் தேதி 31.3.2022. இன்னும் நாலு நாட்களில் கண்காட்சி முடிய இருக்கிறது. முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் சார்பாகச் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைத்து துவக்கி வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் 4 நாட்களில் முடிய போகுது. இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற பொழுது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள் (டேப் ஒன்றை எடுத்து செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றது குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசும் வீடியோ ஒளிபரப்பானது) நாங்கள் வெளிநாடு சென்ற பொழுது எல்லாரும் பயணிக்கக்கூடிய விமானத்தில் பயணம் செய்தோம். அந்தந்த துறை செயலாளர்கள் வந்தார்கள், துறை அமைச்சர்கள் வந்தார்கள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.