Advertisment

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11.05.2021) காலை 10மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் தொடங்கியது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். முதலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், பின்னர் அகர வரிசைப்படி சட்டபேரவை உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொள்கின்றனர். கரோனா பாதிப்பால் பங்கேற்க முடியாதவர்கள் வேறொரு நாளில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ள உள்ளனர்.